தித்திக்கும் சுவையில் சத்தான ராகி மண்ணி.., எப்படி செய்வது?
சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சத்தான ராகி மண்ணி எப்படி செய்வது துன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி- 2 கப்
- தேங்காய்- 1 கப்
- உப்பு- 1 சிட்டிகை
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- வெல்லம்- 1 கப்
- நெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ராகியை நன்றாக கழுவி இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த ராகி, தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து அதன் பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதேபோல் தொடர்ந்து 2 முறை தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரம் வைத்து அதில் வடிகட்டிய பால் சேர்த்து மிதமான சூடுபடுத்தவும்.
இதற்கடுத்து இதில் உப்பு, ஏலக்காய் தூள், வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கெட்டியாக வரும்வரை கிளறவும்.
இறுதியாக கெட்டியாக வந்ததும் நெய் சேர்த்து கிளறி ஒரு தட்டி மாற்றி அரை மணி நேரம் கழித்து துண்டு துண்டாக வெட்டினால் ராகி மண்ணி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |