22 பந்துகளில் 73 ரன் விளாசல்! ரஹானே, சர்ப்பராஸ் வாணவேடிக்கை..18.1 ஓவரில் 217 இலக்கை எட்டிய மும்பை
சையத் முஷ்தாக் அலி தொடரில் மும்பை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது.
தீபக் ஹூடா 51ஓட்டங்கள்
புனேயில் நடந்த சையத் முஷ்தாக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.
4⃣,6⃣,4⃣,4⃣
— BCCI Domestic (@BCCIdomestic) December 16, 2025
Mukul Choudhary (54* off 28) provided a late surge as Rajasthan posted 208/4 against Mumbai 🔥
Scorecard ▶️https://t.co/whgyNcdm2v#SMAT | @IDFCFIRSTBank pic.twitter.com/3X7ZVC1Vsd
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ராம்நிவாஸ் 48 (29) ஓட்டங்களும், தீபக் ஹூடா (Deepak Hooda) 51 (31) ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த லோம்ரோர் 24 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 39 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, முகுல் சௌத்ரி 28 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ஓட்டங்கள் குவித்தது. ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சைராஜ் பாட்டீல் மற்றும் ஷாம்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஜெய்ஸ்வால் அவுட்
அடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ஜெய்ஸ்வால் 15 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அஜிங்கியா ரஹானே மற்றும் சர்ப்பராஸ் கான் கூட்டணி அமைத்தனர்.
இவர்களது வாணவேடிக்கை மூலம் மும்பை அணி 10.2 ஓவரில் 152 ஓட்டங்கள் குவித்தது.
சர்ப்பராஸ் கான் (Sarfaraz Khan) 22 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
Sarfaraz Khan lit up Mumbai's chase with a blistering 73(22) 🔥
— BCCI Domestic (@BCCIdomestic) December 16, 2025
He smashed the fastest 5⃣0⃣ for Mumbai in #SMAT 👌, and put on a 111-run stand with Ajinkya Rahane.
Scorecard ▶️https://t.co/whgyNcdm2v#SMAT | @IDFCFIRSTBank pic.twitter.com/fe4yhtKTgC
ரஹானே, சர்ப்பராஸ் ருத்ர தாண்டவம்
அவரது வெளியேற்றத்திற்கு பின் விக்கெட்டுகள் சரிந்தன. எனினும், அஜிங்கியா ரஹானே (Ajinkya Rahane) அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
கடைசி கட்டத்தில் தாண்டவமாடிய அதர்வா அங்கோல்கர் 9 பந்துகளில் 26 ஓட்டங்கள் விளாசினார். ரஹானே கடைசிவரை ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 72 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) குவித்தார்.
இதன்மூலம் மும்பை அணி 18.1 ஓவரிலேயே 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மானவ் சுதர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Mumbai clinch a thrilling win! 🔥
— Arshit Yadav (@imArshit) December 16, 2025
They hunt down 217 in just 18.1 overs, with Ajinkya Rahane sealing it in style and finishing 72 off 41 balls* 👌
Despite the victory, Mumbai bow out and won’t make the final.#SMAT pic.twitter.com/6zvU1mtxdp
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |