டெஸ்டில் 7000 ஓட்டங்கள்..புதிய வரலாறு படைத்த முஷ்பிகுர் ரஹீம்
Mushfiquar rahim 7000 runs in test: வங்காளதேச அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீரர் எனும் சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில், வங்காளதேச அணியின் மூத்த வீரரான முஷ்பிகுர் ரஹீம், அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீரர் எனும் புதிய சாதனையைப் படைத்தார்.
7000 ஓட்டங்கள்
சில்ஹெட்டில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், வங்காளதேசம் கடைசி நாளில் துடுப்பாடி வருகிறது.

அணியின் மூத்த வீரரான முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ஓட்டங்கள் என்று மைல்கல்லினை எட்டினார்.
இதன்மூலம் வங்காளதேச டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் மற்றும் 7000 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
அதிக சதங்கள் அடித்த வீரர்
இதற்கு முன்பும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 மற்றும் 6000 ஓட்டங்களை எட்டிய முதல் வங்காளதேச வீரர் எனும் சாதனையைப் படைத்திருந்தார்.
அதேபோல் டெஸ்டில் வங்காளதேச அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரஹீம் தன்னகத்தே வைத்துள்ளார். அவர் இதுவரை 107 டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள் அடித்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடங்களில் மோமினுல் ஹக் (13), தமீம் இக்பால் (10), நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (9) ஆகியோர் உள்ளனர்.
[MQQKG9 ]