190 கி.மீ. டிரக் பயணம்., அமெரிக்காவில் இந்திய ஓட்டுனர்களுடன் ராகுல் காந்தி
அமெரிக்காவில் இந்திய டிரக் ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி பயணித்த வீடியோ வைரலாகிவ்ருகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின் போது வாஷிங்டன் டிசியில் இருந்து நியூயார்க்கிற்கு டிரக் சவாரி செய்தார்.
அப்போது 190 கிமீ தூரம் பயணம் செய்த தகவலை ராகுல் காந்தியே யூடியூப் மூலம் பகிர்ந்துள்ளார். டிரக் டிரைவர் தல்ஜிந்தர் சிங்குடன் தான் இந்த டிரக் பயணத்தை மேற்கொண்டதாகவும் ராகுல் விவரித்துள்ளார்.
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள டிரக் டிரைவர்களின் நிலைமையை விரிவாக அறிந்து கொள்ள இந்த பயணம் உதவியது என்று ராகுல் காந்தி கூறினார்.
அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிரக் ஓட்டுநர்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிய இந்த பயணம் உதவியது என்றும் ராகுல் கூறினார்.
இந்தியாவில் பிறந்த தல்ஜிந்தர் சிங் உடனான பயணத்தின் போது அரசியலும் விவாதப் பொருளாக மாறியது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள டிரக் டிரைவர்களின் பணி நிலைமைகளில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
முன்னதாக இந்தியாவில், முர்தலில் இருந்து அம்பாலா, அம்பாலாவிலிருந்து சண்டிகர் மற்றும் டெல்லியில் இருந்து சண்டிகர் வரை டிரக் சவாரி செய்த அனுபவத்தையும் ராகுல் பகிர்ந்து கொண்டார்.
ஓட்டுனர்களை மனதில் வைத்து அமெரிக்காவில் டிரக்குகள் தயாரிக்கப்படுகின்றன என்று கூறிய ராகுல் காந்தி, இந்தியாவில் டிரக்குகள் ஓட்டுநர்களின் வசதிக்காக வடிவமைக்கப்படவில்லை என்றும் கூறினார்.