இந்திய மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு
இந்திய மக்களவை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி தேர்வு
இந்திய மக்களவை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பொறுப்பை ராகுல் காந்தியை ஏற்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவரிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் செய்தது.
ஆனால், இந்த எதிர்க்கட்சி தலைவரின் பதவியை ஏற்க ராகுல் காந்தி தயக்கம் காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "இது தொடர்பாக தற்காலிக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளாகவும், மற்ற நியமனங்கள் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்" என்றும் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |