120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைப்பு.., ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்
ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலம் 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைக்கப்பட்டுள்ளது.
கால அளவு மாற்றம்
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அவர்கள், நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே ரயிலில் டிக்கெட்டை முன்பதிவு செய்கின்றனர்.
அந்தவகையில், பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக 3 மாதங்களுக்கு முன்பாகவே டிக்கெட்டை முன்பதிவு செய்கின்றனர்.
இந்திய ரயில்வேயில் 120 நாட்கள் வரை பயணசீட்டு முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை இருந்தது.
ஆனால், தற்போது ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலம், 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரம், பகல் நேரங்களில் இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் நவம்பர் 1 -ம் திகதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |