மும்பை கனமழையால் அமிதாப்பச்சன் பங்களாவிற்குள் புகுந்த வெள்ளம்
மும்பையில் பெய்த கனமழையால் நடிகர் அமிதாப்பச்சனின் பங்களாவிற்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
பங்களாவிற்குள் வெள்ளம்
மும்பைக்கு மிதமான மற்றும் கடுமையான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. கனமழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அங்கு பெய்த இடைவிடாத மழையால் பொது போக்குவரத்து முடங்கியது மற்றும் நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கியது.
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஜூஹுவில் உள்ள நடிகர் அமிதாப்பச்சனின் பிரதீக்ஷா என்ற பங்களா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கு கணுக்கால் வரை தண்ணீர் தேங்கியுள்ளது.
அமிதாப் பச்சனின் வீடு வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது.
பரவி வரும் வீடியோவானது பங்களாவை சுற்றியுள்ள பகுதி நீரில் மூழ்கியிருப்பதையும், உள்ளே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் தண்ணீருக்குள் நிற்பதையும் காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |