இந்த நாட்டுக்கு கொரோனா தடுப்பூசியை அனுப்ப வேண்டும்! அமெரிக்க தமிழ் வம்சாவளி எம்.பி கோரிக்கை
இந்தியாவுக்கு தடுப்பூசி அனுப்ப வேண்டும் என தமிழ் வம்சாவளி அமெரிக்க எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி ஜோ பைடன் நிர்வாகத்திடன் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு 3.5 லட்சத்தை நெருங்கிவிட்டது.
இந்நிலையில், இந்தியாவுக்கு அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி மருந்துகளை அனுப்பும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தமிழ் வம்சாவளி எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜா கிருஷ்ணமூர்த்தி டெல்லியில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவர் கூறுகையில், அமெரிக்காவில் தற்போது 40 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
பயன்படுத்தப்படாமல் உள்ள அந்த மருந்துகளை, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.