அஸ்வின் இப்படி செய்ததால் தோல்வியா? ஐபிஎல் கோப்பையை கோட்டை விட்டுட்டீங்களே.. ரசிகர்கள் ஆதங்கம்
ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் குஜராத் அணியிடம் ராஜஸ்தான் அணி வீழ்ந்தது எப்படி என்பது குறித்து ரசிகர்கள் விவாதம் நடத்துகின்றனர்.
இப்போட்டியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அவர் பேட்டிங் தேர்வு செய்த போதே அது கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஏனென்றால் குஜராத் அணி பொதுவாக இந்த சீசனில் சிறப்பாக சேசிங் செய்தது.
அதன்படி பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 130-9 ரன்கள் மட்டும் எடுத்தது. பின்னர் வெற்றி இலக்கை எட்டிய குஜராத் அணி கோப்பையை தட்டி தூக்கியது.
இப்போட்டியில் பாண்டியா 30 பந்தில் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவசரப்பட்டு ஆடி விக்கெட்டுகளை கொடுக்காமல் ஆட்டத்தை கடைசிவரை கொண்டு சென்றனர்.
பாண்டியா, வேட் அவுட்டான பின் மில்லர் - கில் இருவரும் வேகம் காட்ட தொடங்கினர். இதனால் ராஜஸ்தான் கையில் இருந்து ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நழுவியது.
முக்கியமாக அஸ்வினுக்கு மிகவும் தாமதமாகவே சஞ்சு சாம்சன் ஓவர் கொடுத்தார். அஸ்வினை டெத் ஓவர்கள் வரை சஞ்சு சாம்சன் வைத்து இருந்தார். இதனால் குஜராத் அணிக்கு பெரிதாக பிரஷர் இல்லை.
அதன்பின்பு தாமதமாக வந்த அஸ்வினும் விக்கெட் எடுக்க முடியாமல் ரன் கொடுத்தார். இதன் மூலம் குஜராத் அணி எளிதாக 130 ரன்களை கடந்து ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ரசிகர்கள் பலரும் அஸ்வின் முன்னரே பந்துவீசியிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். சஞ்சு சாம்சன் தவறு செய்துவிட்டார் என விமர்சித்துள்ளனர்.