டெல்லி கேபிட்டல்ஸை சம்பவம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்! கடைசி ஓவரில் செக் வைத்த ஆவேஷ் கான்
ஐபிஎல் 2024 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.
ரியான் பராக் 84
நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் ரியான் பராக் (Riyan Parag) தனியாளாக அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.
பராக் 45 பந்துகளில் 84 ஓட்டங்களும், அஸ்வின் 19 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசினர். டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில் பந்துவீசிய ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
https://t.co/b25Pi3Z0SU pic.twitter.com/hLnVRxlfBw
— IndianPremierLeague (@IPL) March 28, 2024
டேவிட் வார்னர் விளாசல்
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டினார். ஆனால், அவர் 23 (12) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, நான்ரே பர்கரின் அசுரவேகத்தில் கிளீன் போல்டு ஆனார்.
?????? ?????! ?
— IndianPremierLeague (@IPL) March 28, 2024
Sandeep Sharma with an unbelievable catch to dismiss David Warner ??
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE #TATAIPL | #RRvDC pic.twitter.com/YiPxZ3nS8l
அடுத்து வந்த ரிக்கி புய் அதே ஓவரில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதற்கிடையில் டேவிட் வார்னர் (David Warner) ருத்ர தாண்டவம் ஆடினார்.
மறுமுனையில் ரிஷாப் பண்ட் நிதானமாக ஆட, டேவிட் வார்னர் 49 (34) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
செக் வைத்த ஆவேஷ் கான்
அடுத்து அணித்தலைவர் பண்ட் 28 ஓட்டங்களில் சஹால் ஓவரில் ஆட்டமிழக்க டெல்லி அணி சரிவை சந்தித்தது. அப்போது அதிரடியில் இறங்கிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை சிதறடித்தார்.
Tristan Stubbs' dual maximums have kept things alive for @DelhiCapitals !?
— IndianPremierLeague (@IPL) March 28, 2024
32 needed off the final two overs
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE#TATAIPL | #RRvDC pic.twitter.com/qIkOmLOxy3
கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஆவேஷ் கான் பந்துவீசினார். மிரட்டலாகவும், துல்லியமாகவும் அவர் பந்துவீசியதால் டெல்லி அணியால் 4 ஓட்டங்கள் மட்டுமே அந்த ஓவரில் எடுக்க முடிந்தது.
இதன்மூலம் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. சஹால், பர்கர் தலா 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Flower nahi, fire hai Avesh! ? pic.twitter.com/PVwmHwkTDa
— Rajasthan Royals (@rajasthanroyals) March 28, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |