ரூ 5,51,000 வரதட்சணை வேண்டாம்! 1 ரூபாயைப் பெற்று திருமணம் செய்த மணமகன்..குவியும் பாராட்டு
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் மணமகன் ஒருவர் வரதட்சணை பணத்தை திருப்பியளித்து, திருமணம் செய்துகொண்டது பலரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மாண்ட வரவேற்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரைச் சேர்ந்தவர் பரம்வீர் ரத்தோர். 30 வயதான இவருக்கும், நிகிதா பாடி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு நடந்தது.
மணமகளின் குடும்பத்தாரால் மணமகன் பரம்வீருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மணமகனுக்கு அவரது வருங்கால மாமியார் பரிசுகளை வழங்கினார்.
எனினும், சிவப்பு துணியால் அலங்கரிப்பட்ட மற்றும் ரூ.5,51,000 மதிப்புள்ள பணத்தால் நிரப்பப்பட்ட ஒரு தட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நாம் ஒரு முன்மாதியாக இருக்க வேண்டும்
ஆனால், மணமகன் பரம்வீர் ரத்தோர் அப்பணத்தை அவர்களிடமே திருப்பிக் கொடுத்தார். மேலும், அவர் ஒரு ரூபாய் மற்றும் ஒரு தேங்காயை மட்டும் பெற்றுக்கொண்டு பெண்ணை மணந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அவர்கள் எனக்குப் பணத்தை வழங்க முயன்றபோது, இதுபேன்ற நடைமுறைகள் சமூகத்தில் தொடர்ந்து இருப்பதைக் கண்டு நான் வருத்தப்பட்டேன். அதை உடனடியாக நிராகரிக்க முடியவில்லை, அதனால் நான் சடங்குகளைத் தொடர் வேண்டியிருந்தது.
நான் என் தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடம் பேசி, பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று கூறினேன். நான் நிறைய படித்திருக்கிறேன். எனவே படித்தவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால், யார் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நான் உணர்ந்தேன். நாம் ஒரு முன்மாதியாக இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |