நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது.
அண்ணாத்தே படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஆனால் ரஜினிகாந்துக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.இந்த நிலையில் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வு காரணமாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக அப்பல்லோ சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ரத்த அழுத்த மாறுபாட்டை தவிர ரஜினிக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
