பிரியாவிடை நண்பரே..நடிகர் தர்மேந்திராவின் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா தியோலின் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தர்மேந்திரா தியோல்
இந்தியில் பழம்பெரும் நடிகரும், நடிகை ஹேமா மாலினியின் கணவருமான தர்மேந்திரா தியோல் தனது 89வது வயதில் காலமானார். 
அவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த் இரங்கல்
நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் மறைந்த நடிகர் தர்மேந்திராவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "பிரியாவிடை நண்பரே. பொன்னான இதயமுடைய உங்களுடன் பகிர்ந்துகொண்ட தருணங்களை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். தரம் ஜி, உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என தெரிவித்துள்ளார்.
Farewell, my friend. I will always remember your golden heart and the moments we shared. Rest in peace, Dharam ji. My deepest condolences to his family.
— Rajinikanth (@rajinikanth) November 24, 2025

ரஜினிகாந்தும், தர்மேந்திராவும் இணைந்து இன்சாப் கவுன் கரேகா, பரிஷ்டே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |