ஜெயலலிதாவிற்கு எதிராக பேசியது ஏன்? மனம் திறந்த ரஜினிகாந்த்
ஜெயலலிதாவிற்கு எதிராக குரல் கொடுத்தது ஏன் என ரஜினிகாந்த பேசியுள்ளார்.
ஆர்.எம்.வீரப்பன் ஆவணப்படம்
முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி காலமானார்.
இந்நிலையில், அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவீஸ் சார்பில், 'The Kingmaker' என்ற பெயரில், அவர் பற்றிய ஆவண படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர்.
இதன் முன்னோட்ட வீடியோ, அவரது முதலாவது நினைவு நாளான இன்று வெளியாகியுள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆர்.எம்.வீ குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.
பாட்ஷா நூறு நாள் விழா
இதில் பேசிய ரஜினிகாந்த், "கிங் மேக்கர் ஆர்.எம்.வீ அவர்களின் ஆவணப்படத்தில் பேசியதில் ரொம்ப மகிழ்ச்சி. என்னுடன் நெருக்கமாக இருந்து அன்பு காட்டியவர்கள் ஒரு 4 பேர்.
அது பாலசந்தர் சார், சோ சார், பஞ்சு அருணாச்சலம் சார், ஆர்.எம்.வீ சார். அவங்க இல்லனு நினைக்கும் போது ரொம்ப மிஸ் பன்றோம்.
பாட்ஷா படத்துக்கு அவர் தான் தயாரிப்பாளர். 100வது நாள் வெற்றி விழா மேடையில நான் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசிட்டேன். அப்போது ஒரு தெளிவில்லாம அதை பற்றி பேசிட்டேன்.
அப்போது ஆர்.எம்.வீ, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். நான் பேசியதை கேள்வி பட்ட ஜெயலலிதா, "ரஜினிகாந்த் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி அரசுக்கு எதிராக பேசுகிறார். நீங்க எப்படி சும்மா இருக்க முடியும்னு" ஆர்.எம்.வீ யை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டார்.
இதே கேள்விப்பட்ட எனக்கு ஆடிப்போய் விட்டது. இரவெல்லாம் எனக்கு தூக்கமே இல்லை. மறுநாள் நான் ஆர்.எம்.வீ-யை தொடர்பு கொண்டு பேசிய போது, என்னால் தான் இப்படி ஆகிவிட்டது என கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.
அவர் "அதெல்லாம் விடுங்க. மனசுல வைத்துக்கொள்ள வேண்டாம். ஷூட்டிங் எப்படி போகிறது" என சாதாரணமாக பேசினார். ஆனால் எனக்கு அந்த தழும்பு எப்போவும் போகாது.
நான்தான் கடைசியாக பேசியது. எனக்கு பிறகு எப்படி அவர் மைக் பிடித்து பேச முடியும்.
ஜெயலலிதாவை எதிர்க்க காரணம்
நான் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு சில காரணங்கள் இருந்தால் கூட இந்த காரணம் ரொம்ப முக்கியமானது.
அதன் பிறகு நான் ஜெயலலிதாவிடம் பேசி பார்க்கவா என அவரிடம் கேட்டேன். அதற்கு அந்த அம்மா ஒரு முடிவெடுத்த அதை முடிவு எடுத்த மாற்ற மாட்டாங்க. அதனால உங்க மரியாதையும் கெடுத்துக்க வேண்டாம். அப்படி நீங்க பேசி நான் சேர வேண்டாம் என கூறினார். அப்படி ஒரு நல்ல மனிதர்" என பேசியிருந்தார்.
அதன்பிறகு சில காலத்தில் அதிமுகவில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.

எம்.ஜி.ஆரிடம் மாத சம்பளம் பெற்று அவருக்கே முதலாளியாகும் அளவுக்கு உயர்ந்தவர்! யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்?
எம்.ஜி.ஆரின் பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்த இவர், எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவை தொடங்கிய போது, ரசிகர் மன்றங்களை ஒருங்கினைத்து கட்சியை கட்டமைத்ததில் ஆர்.எம்.வீரப்பன் முக்கிய பங்கு வகித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |