ஏற்கனவே சிறுநீரக மாற்று சிகிச்சை நடந்த நிலையில் அமெரிக்காவுக்கு உடல்நல பரிசோதனைக்காக சென்ற ரஜினிகாந்த்! வெளிவந்த புகைப்படம்
உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த 2016 மே மாதம் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரிலுள்ள மயோ கிளீனிக் மருத்துவமனையில், சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 19ம் திகதி அதிகாலை ரஜினிகாந்த் சென்னையில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் மூலம் தோஹா சென்று, அங்கிருந்து வேறொரு விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். அவருடன் மனைவி லதாவும் சென்றார்.
A long shot but #Thalaivar Swag in USA #Rajinikanth #Annaatthe pic.twitter.com/pqYMZVMWrN
— Thalaivar Designers Team (@TDT_RajiniEdits) June 25, 2021
அங்கு மயோ கிளீனிக் மருத்துவமனையில் ரஜினிகாந்துக்கு உடல்நல பரிசோதனை நடந்தது. பிறகு அவரும், அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் மருத்துவமனையில் இருந்து வெளியே நடந்து வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பரிசோதனை முடிந்து 3 வாரங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கும் ரஜினிகாந்த், பிறகு சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.