சசிகலா குறித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்! தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடக்கம்.. டிடிவி தினகரன் முக்கிய தகவல்
சசிகலாவின் உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் விசாரித்தார் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் என்னிடம் விசாரித்தார். சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது.
சசிகலா உடல் நிலையில் எந்த பாதிப்பும் இன்றி அவர் நலமாக இருக்கிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் உள்பட இரண்டு தொகுதிகளில் தான் போட்டியிட உள்ளதாகவும் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.