நடிகர் ரஜினிகாந்த் அப்போலோவிலிருந்து டிஸ்சார்ஜ்! "உடல்நிலை சீரானது" என மருத்துவமனை அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் இந்திய மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 14 முதல், ரஜினிகாந்த் தனது வரவிருக்கும் தமிழ் படமான 'அண்ணாத்த' படப்பிடிப்பில் ஹைதராபாத்தில் மும்முரமாக இருந்தார். படப்பிடிப்பின்போது, நான்கு குழு உறுப்பினர்கள் இந்த வார தொடக்கத்தில் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு படக்குழுவினர் அனைவருக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தும் சோதனை செய்யப்பட்டதையடுத்து, டிசம்பர் 22-ஆம் தேதி அவரது சோதனை முடிவுகள் எதிர்மறையாகவே வந்தது. டிசம்பர் 12-ஆம் தேதி 70 வயதை எட்டிய நடிகர், தன்னை தனிமைப்படுத்த முடிவு செய்து, அவதானிப்பில் இருந்தார்.
இந்த நிலையில், கடுமையான இரத்த அழுத்த ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 25 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களாக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அப்போலோ மருத்துவமனை ரஜினிகாந்தின் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "திரு ரஜினிகாந்த் 2020 டிசம்பர் 25 அன்று கடுமையான உயர் இரத்த அழுத்தம் மற்றும் சோர்வுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நெருக்கமான மருத்துவ மேற்பார்வையில் வைத்து மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. இப்போது அவரது இரத்த அழுத்தம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். அவரது மேம்பட்ட மருத்துவ நிலையை கருத்தில் கொண்டு அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், மன அழுத்தத்தைத் தவிர்க்கவும், முழுமையான படுக்கை ஓய்வெடுக்கவும் மருத்துவர்கள் ரஜினிகாந்திற்கு அறிவுறுத்தினர்.
