நாடு இல்லை என்றால் நாம் இல்லை! இதனை செய்யுங்கள்.. ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ
சாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் இருப்போம் - ரஜினிகாந்த்
நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ ஆண்டுகள், பல லட்சம் பேர் எவ்வோளவோ சித்திரவதைகள், கொடுமைகளை அனுபவித்துள்ளனர் - ரஜினிகாந்த்
இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் சுதந்திர தினத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில், மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வீட்டின் முன் அனைவரும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு. நம் நாட்டை வணங்கும் விதமாக, ஒற்றுமையை காட்டும் விதமாக..நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ ஆண்டுகள், பல லட்சம் பேர் எவ்வோளவோ சித்திரவதைகள், கொடுமைகளை அனுபவித்துள்ளனர்.
எத்தனையோ பேர் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வருகிற 15ஆம் திகதி சாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன், இரண்டு அடி அல்லது மூன்று அடி கொம்பில் நம் தேசிய கொடியைக் கட்டி, நம் வருங்கால சந்ததியர்களான குழந்தைகள், இளைஞர்கள் கையால நம் வீட்டிற்கு முன்பாக அந்த கோடியை பறக்கவிட்டு நாம பெருமைப்படுவோம்.
நாடு இல்லையென்றால் நாம் இல்லை, இந்தியர்கள் என்பதில் பெருமைகொள்வோம். ஜெய்ஹிந்த்'' என தெரிவித்துள்ளார்.
ஒலி சரி செய்யப்பட்ட புதிய விடியோ … #ஒவ்வொரு__வீட்டிலும்__தேசியக்கொடி🇮🇳#நாம்__இந்தியனென்று__பெருமைகொள்வோம்💪 pic.twitter.com/c1EUjUvueK
— Rajinikanth (@rajinikanth) August 13, 2022