திரும்ப முதல்ல இருந்தா! மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்து அறிவிப்பேன்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என கடந்த 25 ஆண்டுகளாக கேள்வி எழுந்து வந்த நிலையில் அரசியலுக்கு வரபோவதில்லை என கடந்தாண்டு இறுதியில் அறிவித்தார்.
தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரும் முடிவை கைவிடுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசுகிறார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பேன்.
எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்கலாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளேன்.
மக்கள் மன்றத்தை தொடர்ந்து செயல்படுத்துவதா எனவும் ஆலோசிக்கவுள்ளேன்.
அனைத்து கேள்விகளுக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் பேசிபின்னர் பதில் அளிக்கப்படும் என கூறியுள்ளார்.