‘Love U Thalaivaa...’ எத்தனை ஸ்டார் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் போல வருமா? வருண் நெகிழ்ச்சி பதிவு
ரஜினிகாந்தை நேரில் சந்தித்த கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு
தற்போது 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து, சென்னை வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று நடிகர் ரஜினிகாந்த்தை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக உரையாடினர்.
@chakaravarthy29
இந்நிலையில், கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
இரவு வானில் தினமும் ஒரு மில்லியன் நட்சத்திரங்களை பார்க்கலாம். ஆனால் இந்த சூப்பர் ஸ்டாரை பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறையாவது நடக்கும். ஆமாம்... அது நடந்தது... ஒரே & ஓன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்வுடன்... அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினர் போல உணர்ந்தேன். லவ் யூ தலைவா... என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து கமெண்ட்டுக்களை அள்ளி தெறித்து வருகின்றனர்.
You can see a million stars in the night sky daily. But seeing this Super Star is a once in a lifetime occurrence.Yes!!! It happened !!!
— Varun Chakaravarthy (@chakaravarthy29) May 16, 2023
With " THE ONE & ONLY SUPER STAR @rajinikanth " !!!
Seriously felt like a family member the way he spoke to us. Love you Thalaivaa.❤️❤️❤️ pic.twitter.com/utcFiE9g7l