ரஜினி இரவு முழுவதும் மருத்துவமனையில் இருப்பார்! உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் இரவு முழுவதும் மருத்துவமனையில் இருப்பார் என்று அவர் உடல்நலம் குறித்து அப்பல்லோர் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்.
பிரபல இயக்குனரான சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்ட நிலையில், இதில் இருந்த ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ரஜினிக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரஜினிகாந்த் ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சற்று முன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஜினிகாந்த்தை தீவிரமாக கண்காணித்துவருகிறோம்.
அவருடைய ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கான மருந்துகள் மிகக்கவனமாக கொடுக்கப்படுகிறது. இந்த இரவு முழுவதும் அவர் மருத்துவமனையில் இருப்பார்.
கூடுதல் சோதனைகள் நாளை மேற்கொள்ளப்படும். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு உள்ளார்.
அவருடைய நலம் விரும்பிகள் யாரும் அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம். அவரது உடல்நலம் கருதி யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று அவருடைய குடும்பத்தினரும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். அவருடைய மகள், அவருடன் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், ரஜினிகாந்த், உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விசாரித்துள்ளார்.