என்ன ஒரு எழுத்து - அஸ்வத் மாரிமுத்துவின் கனவை நிறைவேற்றிய ரஜினிகாந்த்
டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து
2020 ஆம் ஆண்டு வெளியான 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து.
இதை தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், காயாடு லோகர் ஆகியோரின் நடிப்பில், தமிழில் டிராகன் என்னும் படத்தை இயக்கினார்.
பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 10 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அதிகாரபூர்வகமாக அறிவித்தது.
ரஜினிகாந்த் பாராட்டு
டிராகன் படத்தை பார்த்த ரஜினிகாந்த்திற்கு, படம் பிடித்துள்ளதால், படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவை தனது வீட்டிற்கு அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட படத்தை அஸ்வத் மாரிமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “என்ன ஒரு எழுத்து அஷ்வத், அற்புதம்” என ரஜினி பாராட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நல்ல படம் பண்ணனும், படத்த பாத்துட்டு ரஜினி சார் வீட்டுக்கு கூப்புட்டு வாழ்த்தி நம்ம படத்த பத்தி பேசணும். இது டைரக்டர் ஆகுணும்னு கஷ்டப் பட்டு உழைக்கிற ஒவ்வொரு அசிஸ்டண்ட் டைரக்டரோட கனவு . கனவு நிறைவேறிய நாள் இன்று” என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |