நாம் தமிழர் கட்சியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளனர்.
ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் திகதி அறிவிப்பு என டிசம்பர் 3ம் திகதி ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த, டிசம்பவர் 29ம் திகதி அரசியலுக்கு வரவில்லை என அறிக்கை விட்டு ரசிர்களை கலக்கத்தில் ஆழ்த்தினார்.
சமீபத்தில், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியானது.
இதனிடையே, பிப்ரவரி 11ம் திகதி இராமநாதபுரம், தேனி, வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்த்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிலையில், ரஜினி ரசிகர் மன்ற கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் குருந்தன்கோடு ஒன்றிய நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா ஹுமாயுன், குளச்சல் தொகுதி வேட்பாளர் ஆன்றணி ஆஸ்லின் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.
அதேசமயம் நோற்று, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் - பாசறை பொறுப்பாளர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்துகொண்டனர்.
