நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து சீமானுக்கு நெருக்கமாக இருந்த ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்!
நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு நெருக்கமாக இருந்த ராஜீவ்காந்தி தற்போது திமுகவில் இணைந்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் முன்னாள் இளைஞரணி செயலாளராக இருந்த ராஜீவ்காந்தி கடந்த செப்டம்பர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். இந்நிலையில் தான் ஏன் திமுகவில் இணைந்தேன் என்பதை அவர் விளக்கியுள்ளார்.
தமிழ் தேசிய கொள்கை என்பது திராவிட இயக்கத்தின் விதையாக தான் பார்க்கிறேன். திராவிட இயக்கம் எதுவும் இந்தியை ஆதரிக்கவில்லை.
அதே நேரத்தில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசிய கொள்கை தழைத்தோங்கவே அடிப்படை காரணமாக பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதிதான் காரணம் என கருதுகிறேன். திராவிட இயக்கங்களும், தமிழ் தேசிய இயக்கங்களும் ஒத்த கருத்துடைய நிலையில் தான் செயல்படுகின்றன என கருதுகிறேன்.
அரசியல் சூழல் தான் திமுகவில் இணைய காரணம். திராவிடம் சார்ந்த கொள்கையில் இணைந்து பயணிப்பது தான் எனது திட்டம். என்னுடைய சுயமரியாதைக்கு உட்பட்டு தான் இதில் இயங்க உள்ளேன் என கூறியுள்ளார்.
