அன்புமணியிடம் பாமக தலைவர் பதவியை பறித்த ராமதாஸ் - பின்னணி என்ன?
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார்.
செயல்தலைவராக அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், இனி நானே பாமக தலைவராக செயல்படுவேன் என அறிவித்துள்ளார்.
இனி, அன்புமணி ராமதாஸ் கட்சியின் செயல்தலைவராக செயல்படுவார் என அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, இளைஞர்களை வழிநடத்தும் நோக்கில், இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இன்று தான் தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். கூட்டணி குறித்து கட்சி நிர்வாக குழுவை கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதற்கான காரணம் குறித்து வெளியே சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு மோதல்
கடந்த ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் என்பவரை பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்வதாக அறிவித்தார்.
அப்போது பொதுக்குழு மேடையிலே, "முகுந்தன் கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆகியுள்ளதால், அனுபவம் உள்ள ஒருவரை நியமியுங்கள்" என அந்த நியமனத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது நான் உருவாக்கிய கட்சி, நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது" என ராமதாஸ் கூறியதும், "நான் பனையூரில் தனி அலுவலகத்தை தொடங்கியுள்ளேன். என்னை அங்கு சந்திக்கலாம்" என மேடையிலே அறிவித்து விட்டு சென்றார்.
மறுநாள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருவரையும் சமாதானம் செய்தனர். அதன்பின்னர் 'ஐயாதான் எங்களுக்கே எல்லாமே' என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
ஆனால், இன்று ராமதாஸின் இந்த அறிவிப்பு கட்சிக்குள் இருவருக்குமிடையே உள்ள மனக்கசப்பு அதிகரித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தொடர் தோல்வி
அன்புமணி ராமதாஸ் அருகில் இல்லாத போது இந்த அறிவிப்பை வெளியிட்டதன் மூலம், அன்புமணி ராமதாஸ்க்கு விருப்பம் இல்லாமலே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில தேர்தல்களாகவே பாமக பெரியதாக வெற்றி பெறாத நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ்க்கு விருப்பம் இல்லாமல், அன்புமணியின் அழுத்தம் காரணமாகவே பாமக இணைந்தாக கூறப்பட்டது.
தற்போது, கட்சியை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் எடுத்துள்ளதன் மூலம், கூட்டணி முடிவு முழுவதும், தனது விருப்பத்தின் படியே இருக்கும் என்பதை உணர்த்தியுள்ளார்.
அமித்ஷா இன்று சென்னை வரும் நிலையில், கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள், கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ராமதாசின் இந்த முடிவு, கூட்டணி மாற்றமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேவேளையில், அன்புமணி ராமதாஸ் இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ராமதாஸின் இந்த முடிவு கட்சியின் கூட்டணி பேரம் பேசும் வலிமையை பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |