வீட்டில் பிறந்த பெண் குழந்தை உயிருடன் புதைப்பு - காவல்துறை விசாரணை
rameswaram home birth infant buried police enquiry: ராமேஸ்வரத்தில் வீட்டில் பிறந்த பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வீட்டில் பிறந்த பெண் குழந்தை உயிருடன் புதைப்பு
ராமேஸ்வரம் சம்பை பகுதியைச் சேர்ந்த நாகபாண்டி - லோகநந்தினி தம்பதிக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான லோகநந்தினிக்கு நேற்று அதிகாலை வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து, உடல்நலக்குறைவு காரணமாக லோகநந்தினி சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவரிடம் குழந்தை எங்கே என கேள்வி எழுப்பிய போது, தன்னுடைய மாமனாரும், கணவரின் சகோதரியும் குழந்தையை எடுத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு சென்ற சுகாதாரத்துறையினர், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையை தோண்டி எடுத்துள்ளனர்.
பெண் குழந்தை என்பதால் வேண்டாம் என புதைக்கப்பட்டதாக என்று காவல்துறையினர் குழந்தையின் தந்தை நாகபாண்டி, தாத்தா கிருஷ்ணன், முனீஸ்வரி ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.