செஸ் ஒலிம்பியாட்டில் கவனம் ஈர்க்கும்...8 வயது பாலஸ்தீன சிறுமி!
சென்னையில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 8 வயதான செடர் ராண்டா தனது அபாரமான விளையாட்டு திறனால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதார்.
செஸ் விளையாட்டு போட்டியில் சாதனை புரிவதற்கு வயது ஒருப்போதும் தடையாக இருந்ததே இல்லை என்பதற்கு தனது 12வது வயதில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவே சிறந்த உதாரணம்.
அப்படி இருக்கையில் துப்பாக்கி சூடு சத்தத்திற்கும், குண்டு வெடிப்பு சத்தத்திற்கும் மத்தியில், அமைதிக்கு மத்தியில் விளையாடும் மற்றொரு போர் விளையாட்டில் 8 வயது பாலஸ்தீன சிறுமி செடர் ராண்டா அனைவரையும் வியப்படைய வைத்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் 44 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெற்றதன் முலம் மிக குறைந்த வயதில் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற இளம் வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.
ராண்டா சேடரின் தந்தை 5 வயதிலேயே அவருக்கு சதுரங்கத்தை கற்பிக்க தொடங்கியுள்ளார், அவரது தாயாரும் சதுரங்க போட்டியில் ஆர்வம் கொண்டு இருந்ததால் செஸ் விளையாட்டு ராண்டாவின் வாழ்க்கையாக மாறியுள்ளது.
செடர் ராண்டா பாலஸ்தீனத்தில் நடைபெற்ற மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் 2வது இடத்தை பிடித்ததை தொடர்ந்து, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாலஸ்தீன நாட்டின் சார்பாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கபெற்றுள்ளார்.
செடர் ராண்டா தற்போது 2வது சுற்றில் களமிறங்கி தன்னை விட 12 வயது மூத்த வீராங்கனை ஃபஹிமா என்ற வீராங்கனையை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
மேலும் செடர் ராண்டா தனது குறும்பு தனத்தின் மூலம் அரங்கில் உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் செல்லப் பிள்ளையாகவும் மாறிவிட்டார்.
கூடுதல் செய்திகளுக்கு: மலேசிய வானில் ஒளிர்ந்த சீன ராக்கெட் குப்பை: மிரளவைக்கும் வீடியோ காட்சிகள்!