உலகில் வெறும் 12 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட Range Rover SV Ranthambore Edition.! விலை என்ன தெரியுமா?
ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) இந்தியாவில் Range Rover SV Ranthambore Edition-ஐ ரூ.4.98 கோடி (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இந்தியாவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் நீண்ட வீல்பேஸ் கொண்ட Range Rover-ஐ அடிப்படையாகக் கொண்டது.
இது பிராண்டின் SV Bespoke பிரிவால் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. Ranthambore Edition இந்தியாவுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட முதல் வரையறுக்கப்பட்ட பதிப்பு ஆகும்.
ரன்தம்போர் எடிஷனில் 12 யூனிட்கள் மட்டுமே இருக்கும். ஒவ்வொரு யூனிட்டிலும் பெஸ்போக் டோர் சில் பிளேட்டுகள் இருக்கும், அவை காரின் எந்த மாடலைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் (e.g. 1 out of 12).
எஸ்.வி பிரிவின் வெளிப்புறம் custom black finish மற்றும் reddish finish கொடுக்கப்பட்டுள்ளது.
இது Corinthian bronze மற்றும் anthracite accentsகளுடன் வேறுபடுகிறது. இதில் Tiger Stripes கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கிரில், டெயில் கேட் மற்றும் 23 அங்குல வித்தியாசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
Ranthambore Edition 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது. 400 பிஎச்பி பவரையும், 550 என்எம் திறனையும் கொண்டுள்ளது.
ரன்தம்போர் பதிப்பின் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது.
புலம்பெயர்வை கட்டுப்படுத்தும் பிரித்தானியா., வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை குறைக்க நடவடிக்கை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Jaguar Land Rover Range Rover, JLR Cars, Range Rover SV Ranthambore Edition