தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் நன்றி!
இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி உதவிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை இந்தியாவிடமிருந்து இலங்கை இன்று பெற்றுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மற்றும் ஆதரவு வழங்கிய இந்திய மக்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
இலங்கையில் இந்திய உயர் ஆணையம் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் வழங்கிய உதவியையும் நான் பாராட்டுகிறேன் என ரணில் விக்ரமசிங்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
[CC5KVO ]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர், இங்கிலந்துடனான 5வது டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிப்பு
இலங்கை மக்களுக்காக தமிழகம் சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் சென்னை துறைமுகத்திலிருந்து மே 18ம் திகதி அனுப்பிவைக்கப்பட்டது.
நிவாரணப் பொருள்களுடன் இருந்த கப்பல்களின் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
தமிழகத்திலிருந்து முதல் கட்டமாக ரூ.8.87 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகத்திலிருந்து மேலும் நிவாரணப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.
took part in the ceremony. More consignments from #India to follow .... pic.twitter.com/eIwoRndYni
— India in Sri Lanka (@IndiainSL) May 22, 2022
தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களை பெற்றதற்காக, தமிழகத்திற்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையம் தமிழக அரசை பற்றி குறிப்பிடவே இல்லை.
தமிழகத்திலிருந்து கப்பல் மூலம் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்வை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையம், அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதவில் தமிழக அரசாங்கத்தையோ, முதல்வர் மு.க.ஸ்டாலினையோ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இன்னும் பல தொகுதி உதவிப்பொருட்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்படவுள்ளன..
— India in Sri Lanka (@IndiainSL) May 22, 2022