ஆனந்த் அம்பானியின் செயலை பாராட்டும் பிரபலங்கள்.., அவர் என்ன செய்தார்?
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் கரீனா கபூர் சமூக வலைதளங்களில் புகழ்ந்து பேசியுள்ளனர்.
'வந்தாரா' திட்டம்
கடந்த பிப்ரவரி 26 -ம் திகதி ரிலையன்ஸ் தொண்டு நிறுவனம் (Reliance Charities) 'வந்தாரா' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள விலங்குகளை மீட்பது, காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது, அழிய கூடிய தருவாயில் இருக்கும் விலங்குகளை மீட்பது போன்ற விடயங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து பேட்டி அளித்த ஆனந்த் அம்பானி, "இந்திய மாநிலமான குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் , ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பில் சுமார் 2500 ஏக்கர் நிலத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பராமரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறுவயதில் இருந்தே தனக்கு விலங்குகள் மீது ஆர்வம் இருப்பதால், விலங்குகளுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். இன்னும் 4 ஆண்டுகளில் வன விலங்குகளுக்கான கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை திறக்கவுள்ளேன். அதன் மூலம் மாணவர்கள் இலவச பயிற்சியை மேற்கொள்ளலாம்" என்றார்.
ரன்வீர் சிங் பதிவு
இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் செயலை பாராட்டி பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் (Ranveer Singh) புகழ்ந்து பேசியுள்ளார். அவர் தனது Instagram பக்கத்தில், "ஆனந்த், உங்களிடம் மிகப்பெரிய மற்றும் கனிவான இதயம் உள்ளது"என்று குறிப்பிட்டுள்ளார்.
கரீனா கபூர் பதிவு
அதேபோல, கரினா கபூர் (Kareena Kapoor) தனது Instagram பக்கதில், "சமீபத்தில் டார்சன் எனும் இளம் யானை ஒரு வெற்றிகரமான கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பார்வையை மீட்டெடுத்தது.
உள்நாடு மற்றும் உலக அளவில் காயமடைந்த, புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஆபத்தான விலங்குகளை விடாமுயற்சியுடன் மீட்டு சிகிச்சை அளித்து, மீட்டெடுக்கும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் முன்முயற்சியான, வந்தாராவில் நடக்கும் பல அற்புதமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |