என்னை அடித்து தங்கம் கடத்தியதாக ஒப்புக்கொள்ள வைத்தார்கள் - ரன்யா ராவ் பரபரபரப்பு குற்றச்சாட்டு
என்னை அடித்து துன்புறுத்தி தங்க கடத்தியதாக ஒப்புக்கொள்ள வைத்ததாக ரன்யா ராவ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரன்யா ராவ்
கன்னட திரையுலகை சேர்ந்த நடிகையான ரன்யா ராவ், தமிழில் விக்ரம் பிரபுவுடன் வாகா படத்தில் நடித்துள்ளார்.
கடந்த வாரம் பெங்களூரு விமானநிலையத்தில் வைத்து, தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். இவர் கர்நாடக பொலிஸ் டிஜிபி ராமச்சந்திர ராவ்வின் வளர்ப்பு மகள் ஆவார்.
ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிரபராதி என கடிதம்
தற்போது இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் நான் தங்கமே கடத்தவில்லை என ரன்யா ராவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "நான் விளக்கமளிக்க வாய்ப்பு வழங்கப்படாமல் விமான நிலையத்திற்குள் கைது செய்யப்பட்டேன். நான் கைது செய்யப்பட்டதிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை, அதிகாரிகள் 10-15 முறை என் முகத்தில் அறைந்தனர்.
இருந்தாலும், அவர்கள் தயாரித்த ஆவணங்களில் நான் கையெழுத்திடவில்லை. அதன் பின்னர் உணவு வழங்கப்படாமல், தூங்க விடாமல், கடுமையாக சித்திரவதை செய்தனர்.
வேறு வழி இல்லாமல், 40 வெறும் தாள்களிலும், 50-60 தட்டச்சு செய்யப்பட்ட தாள்களிலும் கையெழுத்திட்டேன். நான் நிரபராதி. என் மீது பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
என்னிடம் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. எதுவும் கைப்பற்றப்படவில்லை. நான் கைது செய்யப்பட்டதில் இருந்து வந்த எந்த அறிக்கைகளையும் நம்ப வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |