ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் நிகழவிருக்கும் 4 அரிய நிகழ்வுகள்
Four rare sky events to light up Aug 12: ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் 4 அதிசய நிகழ்வுகள் நடக்கவுள்ளன.
வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) வானில் நான்கு அரிய விண்வெளி நிகழ்வுகள் ஒரே நாளில் நடைபெற உள்ளன. இதனால் உலகம் முழுவதும் வானியல் ஆர்வலர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

6 Planet Parade
முதலில், அதிகாலை நேரத்தில் ஆறு கோள்களின் பேரணி (Planet Parade) நிகழும். வியாழன், புதன், செவ்வாய், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் வானில் ஒரே வரிசையில் தோன்றும். இதில் வியாழன், புதன், செவ்வாய், சனி ஆகியவை கண்களுக்கு எளிதில் தெரியும். ஆனால் யுரேனஸைக் காண பைனாக்குலர் தேவைப்படும். நெப்டியூனை காண தொலைநோக்கி அவசியம்.
முழு சூரிய கிரகணம்
அதன்பின், முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse) நிகழும். சந்திரன், பூமி மற்றும் சூரியன் இடையே நேரடியாக வந்து, சூரியனை முழுமையாக மறைக்கும். இந்த கிரகணம் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் பகுதிகளில் முழுமையாகக் காணப்படும். ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் பகுதி கிரகணம் தெரியும். இந்தியாவில் இது இரவு நேரத்தில் நிகழுவதால் காண முடியாது.
New Moon
அதே நாளில், புதிய நிலவு (New Moon) நிகழும். இதனால் வானம் மிகவும் இருண்டதாக இருக்கும். இது விண்வெளி ஆர்வலர்களுக்கு விண்மீன்கள் (meteors) தெளிவாகக் காண சிறந்த வாய்ப்பாகும்.

விண்மீன் மழை
இறுதியாக, பெர்செய்ட் விண்மீன் மழை (Perseid Meteor Shower) உச்சத்தை அடையும். ஆண்டுதோறும் நிகழும் இந்த விண்மீன் மழை, ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாகக் காணப்படும். இருண்ட வானத்தில், நூற்றுக்கணக்கான விண்மீன்கள் வானில் பாயும் காட்சி, பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
இந்த நான்கு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடைபெறுவது மிகவும் அரிதானது. வானியல் ஆர்வலர்கள், தொலைநோக்கி, பைனாக்குலர் போன்ற கருவிகளுடன் தயாராகி, இந்த அற்புதமான விண்வெளி நிகழ்வுகளை ரசிக்கத் தயாராக உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |