பிரெஞ்சு மொழியில் இளவரசர் பிலிப் உரையாற்றும் அபூர்வ வீடியோ
பிரித்தானிய இளவரசர் பிலிப் மறைவைத் தொடர்ந்து, பாரீஸில் அவர் பிரெஞ்சு மொழியில் உரையாற்றிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பிரெஞ்சு மொழிப்புலமை பெற்றவரான இளவரசர் பிலிப் 1966ஆம் ஆண்டு, பாரீஸிலுள்ள எலிசி மாளிகைக்கு வருகை புரிந்தபோது மக்கள் முன்னிலையில் பிரெஞ்சு மொழியில் உரையாற்றும் வீடியோ ஒன்றை பிரெஞ்சு ஊடகங்கள் மீண்டும் வெளியிட்டுள்ளன.
தனது இளம்பிராயத்தில் பிரான்சில் சிறிது காலம் வாழ்ந்தவரான பிலிப், பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவராவார்.
வெளியாகியுள்ள அந்த வீடியோவில், உற்சாகத்தைத் தூண்டும் வகையில் உரையாற்றும் பிலிப், இடையிடையே ஜோக்குகளை அள்ளித்தெளிக்க, மக்கள் சிரிப்பதைக் காண முடிகிறது.