விராட் கோஹ்லிக்கு பந்துவீசுவது கடினமென கூறும் ஆப்கான் கேப்டன்..இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்?
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கு எதிராக பந்துவீசுவது மிகவும் கடினம் என ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
சூப்பர் 8 சுற்று
நடப்பு டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தன.
இவ்விரு அணிகளும் பார்படாஸில் இன்று நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்று போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ரஷீத் கான் (Rashid Khan), இந்திய தொடக்க ஆட்டக்காரர் விராட் கோஹ்லி குறித்து பேசியுள்ளார்.
ரஷீத் கான்
அவர் கூறுகையில், ''ஒரு பந்துவீச்சாளராக, விராட் கோஹ்லிக்கு எந்தவொரு தளர்வான பந்தையும் வீச முடியாது. லைன் மற்றும் லென்த்களில் துல்லியமாக இருக்க வேண்டியது அவசியம். பல ஆண்டுகளாக நான் அவருடன் விளையாடியபோதெல்லாம், பந்துவீச்சில் அந்த நிலைத்தன்மையைக் காக்க, அது என்னுடன் இருந்தது. நான் பந்தை அங்கே பிட்ச் செய்ய வேண்டும். அதை கண்டுபிடிப்பது கடினம்.
ஒரு கிளாஸ் துடுப்பாட்ட வீரருக்கு எதிராக பந்துவீச, ஒரு பந்துவீச்சாளாராக எதாவது செய்ய வேண்டும். அப்படியான வீரருக்கு எதிராக பந்துவீசுவது கடினமானது. ஏனெனில், விராட் எப்போதும் Gaps இருப்பதை கண்டறிய முயற்சிக்கிறார்'' என தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளரான ரஷீத் கான், சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் விராட் கோஹ்லிக்கு (Virat Kohli) எதிராக பந்துவீசியுள்ளார்.
மேலும், அவரது தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், 4யில் 3 வெற்றிகளை பெற்று சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.
எனவே, இன்று நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி அளிக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |