பாகிஸ்தான் வீரரின் அபார சாதனையை முறியடித்த ரஷீத் கான்! முதலிடத்தில் இலங்கை ஜாம்பவான்
ரஷீத் கானின் அபார பந்துவீச்சில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.
இப்ராஹிம் ஜட்ரான் 95 ஓட்டங்கள்
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அபுதாபியில் நடந்தது.
Rashid Khan's Game-Changing Bowling Performance 🙌@rashidkhan_19 recorded his 6th five-wicket haul in ODIs and returned with excellent figures of 5/17. His outstanding bowling performance not only helped AfghanAtalan defend the total but also earned him the Game Changer of the… pic.twitter.com/TN2B8nhkEZ
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 12, 2025
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 190 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இப்ராஹிம் ஜட்ரான் (Ibrahim Zadran) 140 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 95 ஓட்டங்கள் குவித்தார்.
மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளும், டன்ஸிம் ஹசன் சாகிப் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
மிரட்டிய ரஷீத் கான்
பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணி ரஷீத் கான் மற்றும் ஓமர்சாயின் தாக்குதல் பந்துவீச்சில் 109 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக டௌஹித் ஹிரிடோய் 24 (34) ஓட்டங்களும், சைப் ஹசன் 22 (23) ஓட்டங்களும் எடுத்தனர்.
ரஷீத் கான் 17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஓமர்சாய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒருநாள் போட்டிகளில் ரஷீத் கான் 6வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, பாகிஸ்தானின் சாக்லைன் முஷ்தாக்கினை முந்தினார்.
ஏனெனில், முஷ்தாக்கை விட (169) குறைந்த போட்டிகளில் (116) விளையாடியிருக்கும் ரஷீத் 6வது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இந்தப் பட்டியலில் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் (10 முறை) உள்ளார்.
பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி 9 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |