10 பந்தில் 30 ஓட்டங்கள்! 2 விக்கெட்டும் வீழ்த்தி..ஜிம்பாப்வேயை சம்பவம் செய்த ரஷீத் கான்
Afghanistan beat zimbabwe by 37 runs: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷார்ஜாவில் நடந்த முதல் டி20 போட்டியில், ரஷீத் கானின் அபார ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
இஜாஸ் அகமது 52
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 177 ஓட்டங்கள் எடுத்தது. இஜாஸ் அகமது 22 பந்துகளில் 52 ஓட்டங்களும், ஷாஹிதுல்லா கமல் 46 ஓட்டங்களும் விளாசினர்.
வாணவேடிக்கை காட்டிய ரஷீத் கான் (Rashid Khan) 10 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் விளாசினார். நியூமன் நியம்ஹுயூரி 4 விக்கெட்டுகளும், பிராட் எவன்ஸ் மற்றும் மசுகு தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ரஷீத் கான் ஆட்டநாயகன்
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 19.1 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால், ஆப்கானிஸ்தான் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ரியான் பர்ல் 24 பந்துகளில் 32 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள்) விளாசினார். பரூக்கி 3 விக்கெட்டுகளும், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ஓமர்சாய் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அதிரடியாக 30 ஓட்டங்கள் விளாசியதுடன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றிய ரஷீத் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
