சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த ரஷீத்கான் - வைரலாகும் வீடியோ
சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த ரஷீத்கானின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிறுவர்களுடன் விளையாடிய ரஷீத்கான்
தற்போது ஐபிஎல் தொடர் பல நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரஷீத்கான் இடம் பெற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி விளையாடி வருகிறார்.
சமீபத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக் தொடக்க ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரஷீத்கானுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.
இப்போட்டியில், ரஷீத்கான் தன் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெறும் 3 பந்துகளில் 10* ஓட்டங்கள் எடுத்திருந்தார். கடந்த மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தனது அணியை லைனில் கொண்டு சென்றார்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
राशिद खान भारतीय प्रशंसकों के साथ खेला गली क्रिकेट.#RashidKhan #IPL2O23 #gullycricket #gujrattitans @rashidkhan_19 #IPL #RashidKhan pic.twitter.com/xf3uIt78O3
— AsianNews (@Asian_News_) May 4, 2023