உக்ரைன் போர் முடிவுக்கு வரும்.... மிக மோசமான நெருக்கடி மேற்கத்திய நாடுகளை உலுக்கும்: பிரபலம் ஒருவரின் ஆருடம்
ரஷ்யாவின் புதிய ரஸ்புடின் என அழைக்கப்படும் நபர் உக்ரைன் போர் தொடர்பிலும் ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகள் தொடர்பிலும் பீதியை ஏற்படுத்தும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளுக்கு என்ன நடக்கும்
ரஷ்யாவின் சமகால ரஸ்புடின் என அழைக்கப்படும் Ziraddin Rzayev என்பவர் துணிச்சலான பல கணிப்புகளை வெளியிட்டு வருபவர். அவர் தற்போது 2023ல் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் என்ன நடக்கும் என்பது தொடர்பில் ஆருடம் வெளியிட்டுள்ளார்.
Image: Reqsane Ismayilova Vlog
உக்ரைன் போர் தொடர்பில் குறிப்பிட்ட அவர், மிக விரைவில் உக்ரைன் போர் முடிவுக்கு வர இருக்கிறது. ஆனால், போரினை மொத்தமாக ரஷ்யா முடித்துக்கொள்ளுமா அல்லது ஒரு அச்சுறுத்தும் நிலையிலேயே உக்ரைனை வைத்திருக்குமா என்பது தொடர்பில் விளாடிமிர் புடின் மிக விரைவில் முடிவை எடுப்பார் எனவும், அதற்கு குறிப்பிட்ட சில நாடுகளின் பேச்சுவார்த்தையும் உதவியாக இருக்கும் என்றார்.
நெருக்கடியை உருவாக்கும்
உக்ரைன் போரை விடவும் மிக மோசமான நெருக்கடி மேற்கத்திய நாடுகளை உலுக்க இருக்கிறது என குறிப்பிட்டுள்ள Rzayev, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பும் ஒன்றிணைந்து புதிய நெருக்கடியை உருவாக்கும் எனவும், அதில் ரஷ்யாவை இழுத்துவிடும் எனவும் Rzayev எச்சரித்துள்ளார்.
@getty
மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், அரசியல்வாதிகளின் எண்ண ஓட்டங்களை தெரிந்து வைத்திருக்கும் தமக்கு, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது தெரியும் எனவும் Rzayev உறுதிபட கூறியுள்ளார்.
மேலும், மனிதகுலத்திற்கு மிக நெருக்கடியான காலகட்டம் நெருங்கி வருகிறது என தெரிவித்துள்ள அவர்,
பஞ்சமும் உணவு பற்றாக்குறையும் மிக மோசமாக 2023ல் தலைதூக்கும் என்றார். இது மேற்கத்திய நாடுகளை மொத்தமாக உலுக்கும் என்றார்.