கள்ளக்குறிச்சி மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்திய எலிக்காய்ச்சல் - 7 பேர் கண்டுபிடிப்பு
கள்ளக்குறிச்சி பகுதியில் சிலருக்கு எலிக்காய்ச்சல் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் எலிக்காய்ச்சல்
கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி அருகில் உள்ள வடதொரசலூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த ஒரு சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
7 வயது சிறுவன் குபேரன், சுபானி, வெற்றிவேல், பிரபாவதி, கலைவாணன் மற்றும் திவ்யா போன்றவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நினைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை வந்துள்ளனர்.
பின்னர் கடந்த 3 ஆம் திகதி தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர் மருத்துவ முகாமிட்டு இரத்த பரிசோதனை செய்துள்ளனர்.
குறித்த இரத்த பரிசோதனையின் முடிவில் 7 பேர் எலி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியானது.
2.5 ஏக்கரில் வீடு, நீச்சல் குளம், தியேட்டர் என கண்ணாடி வீட்டில் வாழும் பிரபல பாடகர் - அவருடைய சொத்து மதிப்பு?
உடனே பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர் சிகிச்சையின் பின்னர் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஏனையவர்கள் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |