நெடுஞ்சாலையின் பெரிய பள்ளத்திற்கு எலி தான் காரணம்! அதிகாரியின் பதிலால் உடனே பணிநீக்கம்
டெல்லி - மும்பைக்கு இடையே போடப்பட்ட நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு எலி காரணம் என்று கூறிய அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளத்திற்கு எலி காரணம்
டெல்லி - மும்பைக்கு இடையே 1,386 கிலோமீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை போடப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலை அமைத்தால் டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்வதற்கு 24 மணிநேரம் என்பதில் இருந்து 12 முதல் 14 மணிநேரமாக குறையும்.
இந்த நெடுஞ்சாலையானது ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக பயணிக்கிறது.
இதன் வேலை 80 சதவீதம் முடிந்துவிட்டது என்றும், அடுத்த 1 வருடத்தில் அனைத்து வேலைகளும் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இந்த சாலையின் ஒரு பகுதியாக இருக்கும் ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் அமைக்கபட்டுள்ள சாலையின் பல்வேறு பகுதிகளில் பள்ளங்கள் உருவாகியுள்ளது.
இந்த பள்ளத்திற்கு காரணம் எலி தான் என்றும், எலி ஓட்டை போட்டதால் தான் இந்த பள்ளம் உருவானது என்றும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து விரைவுச் சாலையின் திட்ட இயக்குநர் பல்வீர் யாதவ் கூறுகையில், "தண்ணீர் கசிவின் காரணமாக நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |