வெறும் 5 நாட்களில் ரூ.80000 கோடியை இழந்த ரத்தன் டாடாவின் டிசிஎஸ் நிறுவனம்
ரத்தன் டாடாவின் டிசிஎஸ் நிறுவனம் வெறும் 5 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.80000 கோடியை இழந்துள்ளது.
ரூ.80000 கோடி இழப்பு
டாடா குழுமத்தின் ஐடி நிறுவனமான ரத்தன் டாடாவின் தலைமையில் இயங்கி வந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், கடந்த சில நாட்களாக அதன் சந்தை மூலதனத்தில் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
செப்டம்பர் 25-ம் திகதி அன்று டிசிஎஸ் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ரூ.2958 ஆக சரிந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.10.71 லட்சம் கோடியாக உள்ளது.
சிஎன்பிசிடிவி18 அறிக்கையின்படி, ஐந்து வர்த்தக அமர்வுகளில் கிட்டத்தட்ட ரூ.80000 கோடியை இழந்துள்ளது டிசிஎஸ் நிறுவனம்.
அமெரிக்காவின் புதிய H-1B விசா விதிமுறையால் டிசிஎஸ் மற்றும் இந்திய ஐடி நிறுவனங்களின் சந்தை மூலதனத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை இழந்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி டிசிஎஸ் பங்கு ரூ.4,494 ஆக உயர்ந்து சாதனை படைத்த நிலையில், அதன் பிறகு 35 சதவீதம் சரிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |