ஒரு கப் ரவை போதும்.., மணமணக்கும் ரவை பொங்கல் செய்யலாம்
காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவு வெண் பொங்கல்.
அந்தவகையில், மணமணக்கும் ரவை பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசி பருப்பு- 1 கப்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- முந்திரி- 10
- பெருங்காயம்- 1 சிட்டிகை
- பச்சைமிளகாய்- 2
- கறிவேப்பிலை- 2 கொத்து
- இஞ்சி- 1 துண்டு
- ரவை- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் பாசி பருப்பை சேர்த்து 2- 3 முறை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், முந்திரி, பெருங்காயம், பச்சைமிளகை, நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அடுத்து இதில் ரவை சேர்த்து 2 நிமிடம் நன்கு வறுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இதில் வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு வேகவைக்கவும்.
இறுதியாக இதில் உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாகி வந்ததும் இறக்கினால் சுவையான ரவை பொங்கல் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |