ஒரு கப் ரவை இருந்தால் போதும்.., 5 நிமிடத்தில் பூரி செய்யலாம்
கோதுமை மாவில் பூரி செய்து சாப்பிட்டு சலித்து போய்விட்டதா? அப்போ இனி ரவையில் பூரி செய்து சாப்பிடுங்கள்.
ரவை வைத்து செய்யப்படும் இந்த பூரி அனைத்து விதமான சைட்டிஷ்க்கும் தொட்டு சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.
அந்தவகையில், ஒரு கப் ரவை வைத்து சுவையான பூரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவை- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ரவை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுத்து இதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து பூரி மா போல் பிணைந்துகொள்ளவும்.
பின் இதனால் உலர் மா தெளித்து பூரி மா போல் தேய்த்து வைத்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பூரி பொறித்து எடுத்தல் சுவையான ரவை பூரி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |