ஒரு கப் ரவை இருந்தால் போதும்.., 15 நிமிடத்தில் ஊத்தப்பம் செய்யலாம்
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஊத்தப்பம் ஒரு பிரபலமான காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டியாக உள்ளது.
இதனை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விருப்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், 15 நிமிடத்தில் சுவையான ரவா ஊத்தப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவா- 1 கப்
- அவல்- ½ கப்
- தயிர்- ½ கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 1 கப்
- பச்சை மிளகாய்- 3
- இஞ்சி- 1 துண்டு
- கறிவேப்பிலை- 1 கொத்து
- பெருங்காயத்தூள்- சிறிதளவு
- கேரட்- 2
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- நெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் அவலை நன்கு கழுவி 15 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் ரவை, ஊறவைத்த அவல், தயிர், உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி மாவை கரைக்கவும்.

அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, கடுகு, சீரகம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
இதற்கடுத்து இதில் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, துருவிய கேரட் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் தவா வைத்து மாவை ஊற்றி வதக்கிய கலவையை மேலே வைத்து நெய் ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுத்தால் ரவா ஊத்தப்பம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |