அஸ்வின் பவுலிங்கில் பேட்டை தாண்டி சென்று ஸ்டெம்பை பதம் பார்த்த பந்து! கோல்டன் டக் ஆன ரசல் வீடியோ
ஐபிஎல் போட்டியில் ஆண்ட்ரே ரசல் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாகி கோல்டன் டக் முறையில் வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் கொல்கத்தா வீரர் ஆண்ட்ரே ரசல் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அவருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வைட் அங்கிளில் இருந்து வந்து பந்து வீசினார்.
What a delivery by @ashwinravi99 to dismiss Andre Russell. A spinner with an agression of a Fast Bowler ❤️ pic.twitter.com/JuMUiLyVgd
— Samiproximity (@Samiproximity) April 18, 2022
அப்போது ரசல் பேட்டை தாண்டி சென்ற பந்து ஆஃப்-ஸ்டம்பை பதம் பார்த்தது. இதையடுத்து கோல்டன் டக் அவுட்டானார் ரசல், இந்த விக்கெட்டை அஸ்வின் ஆக்ரோஷமாக அங்குமிங்கும் ஓடியபடி கொண்டாடினார்.
இப்போட்டியில் அஸ்வின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் தான் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.