நாவூறும் சுவையில் மாங்காய் சட்னி.., எப்படி செய்வது?
கோடைகாலத்தின் மிகச்சிறப்பான உணவுப் பொருட்களில் மாங்காய் முக்கியமானது.
இது வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், உடலுக்குக் குளிர்ச்சி தரவும், சிறந்த செரிமானத்திற்கும் மாங்காய் மிகவும் உதவுகிறது.
அந்தவகையில், நாவூறும் சுவையில் மாங்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாங்காய்- 1
- தேங்காய்- 1 கப்
- சீரகம்- ½ ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 4
- உப்பு- 1 ஸ்பூன்
- தயிர்- ½ கப்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- உளுத்து- 1 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 2
- பெருங்காயத்தூள்- சிறிதளவு
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், நறுக்கிய மாங்காய், சீரகம், பச்சைமிளாகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின் இதில் தயிர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இறுதியாக தாளித்த கலவையை அரைத்த சட்னியில் சேர்த்து கலந்தால் சுவையான மாங்காய் சட்னி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |