சிறுவன் Rayan உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த மொராக்கோ மன்னர்
மொராக்கோவில் கிட்டத்தட்ட 5 நாட்களாக கிணற்றுக்கு சிக்கி இறந்த 5 வயது சிறுவன் Rayan-ன் பெற்றோருக்கு அந்நாட்டின் மன்னர் ஆறாம் மொஹமது (King Mohammed VI) இரங்கல் தெரிவித்துள்ளார்.
மொராக்கோவின் Chefchaouen மாநிலத்தில் உள்ள Ighara கிராமத்தை சேர்ந்த Rayan Awram என்ற 5 வயது சிறுவன் கடந்த 1-ஆம் திகதி (செவ்வாய்கிழமை) மாலை, 104 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
அதனைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவும் பகலும் சிறுவனை மீட்கும்பணி நடந்தது. Rayan மீண்டு வர மொராக்கோ மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து வேண்டுதல்கள் குவிந்தன. சமூக வலைதங்களில் #SaveRayan என்ற ஹாஷ்டேக் கடந்த 3 நாட்களாக ட்ரெண்டாகி வந்தது.
புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறுவன் நலமாக இருப்பதாகவும், அவனுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் கிணற்றுக்கு அனுப்பப்பட்டதாகவும் செய்திகளுடன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகின. ரயனின் தந்தையும், தனது மகன் தண்ணீர் குடிப்பதை மேலிருந்து வீடியோவில் பார்த்ததாகவும் கூறினார்.
தொடந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பள்ளம் தோண்டும் பனி நடைபெற்று வந்தது. சிறுவனை இன்னும் சில மீட்டர்களில் நெருங்கிவிடுவோம் என மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறினர்.
ஆனால், சிறுவநின் நிலை குறித்து எந்த தகவலையும் யாரும் வெளியிடவில்லை, அதன்பிறகு புதிய புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை.
உலகம் முழுவதிலும் இருந்து வேண்டுதல் குரல்கள் மட்டுமே அதிகரித்தன. சம்பவ இடத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி 'எழுந்து வா Rayan', 'எழுந்து வா மகனே' என கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் அங்கிருந்த மக்கள் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், கிணற்றைச் சுற்றியுள்ள நிலம் இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டதால், வெள்ளிக்கிழமை தற்காலிகமாக முயற்சிகள் நிறுத்தப்பட்டன.
அதற்கு பிறகு முழுவதுமாக ஆயுதங்களைக் கொண்டு கைகளாலேயே சிறுவன் இருக்கும் இடத்தை நோக்கி சுரங்கம் தோண்டப்பட்டது. இதனாலேயே, நேரமும் தாமதமாகிக்கொண்டே இருந்தது. இருப்பினும், சிறுவனை உயிருடன் மீட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் Rayan சடலமாகவே மீட்கப்பட்டான்.
சிறுவன் முன்பே உயிரிழந்திருக்கலாம் என்றும் இந்தவிடயம் மொராக்கோ மன்னருக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவர் சிறுவன் இறந்துவிட்டான் என்றும் அவனது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இறங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அறிக்கை ஒரே வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலுமிருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுவருகிறது.