இன்னும் ஒரு மீற்றர் தான், ஆனால்.., சிறுவன் Rayan குறித்து அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்..
மொராக்கோவில் கிட்டத்தட்ட 104 அடியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள சிறுவனை மீட்க பணியாளர்கள் போராடிவருகின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, சிறுவன் Rayan-ஐ நெருங்க இன்னும் ஒரு மீற்றருக்கும் குறைவான, அதாவது சில அங்குல இடைவெளியே இருப்பதாக கூறப்படுகிறது.
மொராக்கோவின் Chefchaouen மாநிலத்தில் உள்ள ஹிக்ரான் கிராமத்தை சேர்ந்த Rayan என்ற 5 வயது சிறுவன் கடந்த 1-ஆம் திகதி (செவ்வாய்கிழமை) மாலையில் 100 அடி (32 மீற்றர்) ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.
சிறுவன் விழுந்தது தெரியவந்ததும், கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவும் பகலும் தொடர்ந்து அவனை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், மீட்புப்பணியாளர்கள் சிறுவனை மிகவும் நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கிணற்றுக்குள் கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ள கமெரா மூலம் பார்க்கையில் Rayan-ன் உடலில் அசைவுகள் தெரியவில்லை என கூறப்படுகிறது.
அதனால், 'அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான் என்று உறுதியாகத் தெரியவில்லை' என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

