ஆழ்துளை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்! கதறிய தாயார்.. கண்கலங்க வைக்கும் பெற்றோரின் புகைப்படம்
மொராக்கோவில் 104 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் அவன் பெற்றோரின் மனதை உருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
25 சென்டி மீட்டர் விட்டமுள்ள கிணற்றில் 104 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவன் ராயனை மீட்க 5 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வந்தனர்.
ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய குழித் தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். அந்த சிறுவன் மீட்பு நடவடிக்கை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
எனினும் பாறைகள் காரணமாகவும், நிலச்சரிவு அச்சுறுத்தலாலும் பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை மீட்டதாகவும், பின்னர் அவன் உயிரிழந்துவிட்டான் என்பதை அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த சூழலில் ராயன் உயிரிழந்தது அவன் பெற்றோரை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
முக்கியமாக ராயனின் தாயார் மகன் இறப்பால் பெரும் அதிர்ச்சியில் உள்ளார். மகனின் சடலம் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட போது அவர் கதறி அழுதார்.
இதையடுத்து ராயனின் தந்தை தனது மனைவியை கைதாங்கலாக பிடித்து கொண்டு சோகத்துடன் நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது. இதனிடையில், மொரோக்கோ மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள பலர் ராயன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.