2040-க்கு முன் கனடாவின் வாகன தொழில் மறைந்து போகும் அபாயம்
கனடாவின் கார் உற்பத்தித் துறை, குறிப்பாக ஒன்ராறியோ மாகாணத்தில் மையமாக இயங்கும் ஆட்டோ தொழில், 2040-க்குள் முற்றிலும் மறைந்து போகும் அபாயம் இருப்பதாக Royal Bank of Canada (RBC) எச்சரித்துள்ளது.
ரொறன்ரோவில் நடைபெற்ற தொழில் மாநாட்டில், RBC Thought Leadership நிர்வாக இயக்குநர் ஜோர்டன் பிரென்னன், “அமெரிக்க சந்தைக்கு சுங்கவரி இல்லாமல் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இழந்தால், கனடாவின் வாகன தொழில் சிதைந்து போகும்” என்று கூறினார்.
RBC ஆய்வின்படி, CUSMA (Canada-US-Mexico Agreement) உடன்படிக்கை பலவீனப்படுத்தப்பட்டால், மேலும் சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் (EVs) கனடா சந்தையில் அதிகரித்தால், ஒன்டாரியோவில் உள்ள அனைத்து அசெம்பிளி ஆலைகளும் 2040-க்குள் மூடப்படும்.

அப்போது கனடாவில் விற்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் சீன EV-களாக இருக்கும்.
அவுஸ்திரேலியாவில் நடந்தது போல, கனடாவிலும் தொழில் முற்றிலும் சிதைந்து போகும் அபாயம் உள்ளது.
“இது இன்கர்சோல், விண்ட்சர், ஓஷாவா போன்ற நகரங்களுக்கு தலைமுறைகள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று பிரென்னன் எச்சரித்தார்.
ஆனால், அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தகம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டால், சீன EV-களுக்கு சுங்கவரி தொடர்ந்தால், AI மற்றும் ஆட்டோமேஷன் அதிகரித்தால், கனடாவில் வாகன உற்பத்தி 1.3 மில்லியனிலிருந்து 2 மில்லியன் வரை உயரலாம் என RBC நம்புகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற Magna International CEO ஸ்வாமி கோடகிரி, “வேலைவாய்ப்புகளை காப்பது, வாகன விலையை குறைத்து மக்களுக்கு சுலபமாக்குவது, அல்லது நீண்டகால பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்குவது என வாகன தொழில் மூன்று வழிகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
GM Canada மற்றும் Honda Canada முன்னாள் தலைவர்கள், கனடாவில் முதலீடுகள் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஒன்ராறியோ அரசு, “எந்த வகை வாகன உற்பத்தி இருந்தாலும், வேலைவாய்ப்புகள் தொடர வேண்டும்” என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#CanadaAutoIndustry #RBCReport #OntarioCars #CUSMA #EVs #AutomotiveNews #CanadianEconomy #2040Warning